அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ள நிலையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தபோது, ”இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது.தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது.
ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்து விட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், எடப்பாடி விடுத்த கொலை மிரட்டல் பாதிக்கப்பட்ட ஒருவரது அழைப்பின் பேரில் உதவி கோரியவரை அழைத்து வரச் செல்லும் போது ஆம்புலன்ஸில் டிரைவர் மட்டும் தான் செல்வார் . அப்படியெனில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை எடப்பாடி நோயாளியாக்கி விடுவாரா…? இது ஆம்னிபஸ் கூரை மீது நின்று கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு எடப்பாடி விடுத்த அப்பட்டமான கொலை மிரட்டல் அல்லவா..? தமிழக அரசு எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம், என மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.