மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உட்பட 5 அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சென்னை போன்ற பெரு நகரங்கள் உற்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிருப்பதி அடைந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. மதுராந்தகம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் காரணமாக அமைச்சர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை மதுராந்தகத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், ராஜ்மோகன் என 5 அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். ஆதவ் அர்ஜுனா வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்து, சால்வை அணிவித்து கௌரவித்துக் கொண்டிருந்த நேரத்தில் சட்டென மின்வெட்டு ஆனது.
மின்வெட்டு ஆன அடுத்த 2-3 நிமிடங்களில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எது எப்படி இருப்பினும் அமைச்சர்கள் பங்கேற்க கூட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அமைச்சர்களால் கூட மின்வெட்டை தடுக்க முடியாதோ? என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.