“வேலியே பயிரை மேய்ந்த கதையாக”, பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காவலரே ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி, காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாகி மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த குப்புராஜ் மகன் உதயகுமார். இவர் பில்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. எப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் இருந்துள்ளனர். அதன் விளைவாக அந்த பெண் கர்ப்பம் ஆகியுள்ளார்.
இந்த தகவல் அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை காவலர் உதயகுமார் வடவள்ளி மற்றும் அவிநாசி அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பலமுறை கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே காவலர் ஆயுதப்படை காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் என் வாழ்க்கையை ஏமாற்றி சீரழித்து விட்டாய் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இந்த விசயம் வெளியே தெரிந்தார், நாம் தனிமையில் இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், “உயிருடன் இருக்க மாட்டாய்” என்றும் உதயகுமார் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மனவேதனையில் இருந்த அப்பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஏமாற்றுதல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மே 12, 2026 அன்று உதயகுமாரைக் கைது செய்தனர்.