விருத்தாசலத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இவ்வளவு நாட்களாக திமுகவுடன் ஏன் கூட்டணி அமையவில்லை என்று உண்மையாகவே ஃபீல் பண்ணுகிறேன். இத்தனை வருடமாக ஒரு தவறான கூட்டணியில் இருந்து விட்டமோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. கலைஞர் மற்றும் கேப்டன் ஆகிய இரண்டு தெய்வங்கள் மேலே இருந்து ஆசீர்வாதம் அளித்த காரணத்தால் தான் இந்த கூட்டணி அமைந்ததாகவும், மக்கள் விரும்பும் சரியான நேரத்தில் அமைந்த சரியான கூட்டணி, வெற்றிக்கூட்டணி கலைஞர்-கேப்டன் இருவரும் உயிருடன் இல்லையென்றாலும், கடவுளாக இருந்து இந்த கூட்டணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25- ந் தேதி மதுரை மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் கே.என். அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த விஜயராஜ் என்ற விஜயகாந்த் தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். பள்ளியில் படிக்கும்போதே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். மேலும், சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.
தனது 26 வயதில் 1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்து தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தங்கி இயக்குனர் திரு. M.A. காஜா அவர்களின் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார். 1978 -ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பித்து 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர் மன்றமாக மாற்றி 1982 -ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றினார்.

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்ற முழக்கத்துடன் 1982 -ஆம் ஆண்டு ”தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர்மன்றம்” பெயர் மாற்ற இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற கொள்கையுடன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்துட்ட உதவிகள் செய்து வந்தனர். சாட்சி, சட்டம் சிரிக்கிறது, நீதி பிழைத்தது போன்ற சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்து மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதன் காரணமாக அவருக்கு ”புரட்சிக்கலைஞர்” என்ற பட்டமும் கிடைத்தது.
‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபாத்திரங்களை குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 100-வது படமான செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைப்படம் அவருக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. இதில், ஒரு காட்டில் இலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.
1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி L.C. கண்ணையா அம்சவேணி அவர்களின் மகளான பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். ஈழ விடுதலைக்காக போராடிய போராளி பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், முருகன் மேல் உள்ள பற்றாலும் எனவும், தாம் பிறந்த மதுரை மண் மீது உள்ள பற்றாலும், இளைய மகனுக்கு சண்முகபாண்டியன் என பெயர் சூட்டினார்.
எம்.ஜி.ஆரைப் போலவே தனது தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையில் ஏழை எளியோருக்கு வாரி வழங்கியவர். சினிமா மற்றும் உதவி செய்யும் குணம் காரணமாக “கருப்பு எம்.ஜி.ஆர்” என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு கட்சி துவங்குவேன் என்று திருவண்ணாமலையில் விஜயகாந்த் அறிவித்து அன்பு, அறம், ஆற்றல், என்பதை கொள்கை முழக்கமாகக் கொண்டு 2005-ம் ஆண்டு செப்டம்பரில் தேமுதிகவை தொடங்கினார்.
2006-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பல லட்சம் வாக்குகளைப் பெற்று, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

2009 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை பெற்றது தேமுதிக. 2011 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, களம் கண்ட தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று திமுக கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றார். இப்படி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்தாண்டு அதிமுக-வுடன் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தேமுதிக, டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்தது. அந்தக் கூட்டணியும் தேமுதிகவுக்கு கை கொடுக்காத நிலையில் முதல் முறையாக திமுக-வுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை தேமுதிக. சந்திக்க உள்ளது.
இது போன்ற சூழலில் முதல் முறையாக கட்சி தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகும் நிலையில் திமுக மூலமாக பாராளுமன்றத்தில் தேமுதிக எம்.பியாக கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதவியேற்று டெல்லியில் முரசு கொட்டப்போகிறது என்று தொண்டர்கள் உச்சகம் அடைந்துள்ளார் தேமுதிக 2.0 மூலம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்து, கேப்டனின் முரசு சின்னத்துடன், துரோகிகளுக்குப் பாடம் புகட்டி, வரும் காலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தேமுதிகவினர் நம்பிக்கையில் உள்ளனர்.