தவெக இதுவரை நடத்திய பேரணிகளில் ஏற்பட்ட சேதங்களை அந்த கட்சியே நிவாரணம் வழங்கி சரி செய்ய வேண்டும் என்று தவெக தாக்கல் செய்த ரிட் மனு மீதான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சார்பாக மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருச்சியில் விஜய் தலைமையில் செப்டம்பர் 13 அன்று நடந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்தது, அதில் ஒரு நிபந்தனை கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்வில் பங்கேற்கக்கூடாது என்பதாகும். தனது நிகழ்வுகளில் யாரையும் பங்கேற்பதை கட்சி எப்படி தடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், தவெக நிகழ்வுகளுக்கு மட்டும் காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக கட்சி புகார் அளித்தது. இந்நிலையில் தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்த விரிவான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதில் தமிழக வெற்றி கழகம் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்றும், அதன் அடிப்படை சித்தாந்தம் மதச்சார்பற்ற சமூக நீதி, மதச்சார்பின்மை, சமூக சமத்துவம், உள்ளடக்கிய பிரதிநிதித்துவம், மொழியியல் நல்லிணக்கம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் இருமொழிக் கொள்கையை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கட்சியில் சேர ஈர்த்ததாகவும், அது விரைவாக ஒரு வலுவான ஜனநாயக சக்தியாகவும், மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது என்றும் பிரமாணப் பத்திரம் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி என். சதீஷ்குமார், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் அல்லது அதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும்போது அரசியல் கட்சிகளிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகை (டெபாசிட் தொகை) வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது. கட்சித் தொண்டர்களால் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுசெய்ய இந்த பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) இ. ராஜ் திலக்கிற்கு செப்டம்பர் 24-ந் தேதிக்குள் இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்த விரும்பும் பிற அமைப்புகளுக்கும் பொருந்தும்.
அரசியல் கட்சிகளின் பெரிய கூட்டங்களின் போது கடந்த காலத்தில் தனியார்/பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அரிதாகவே கிடைக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு பரவலான சேதங்களைத் தடுக்கும் நோக்கில் 1992 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் முதன்மையாக இருந்தபோதிலும், தனியார் சொத்துக்களையும் அதன் கீழ் கொண்டு வர 1994 -ஆம் ஆண்டில் சட்டம் திருத்தப்பட்டது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டத்தின் நோக்கமும், அதன் திருத்தமும், பொது/தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்க, ஆர்ப்பாட்டங்கள்/பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத அல்லது இன அல்லது வேறு எந்தக் குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஆகும். சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட சட்ட விதிகள் இழப்பீடு வழங்க வழிவகை செய்கின்றன. ஆனால் அவை இத்தனை ஆண்டுகளாக சரியாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே, இதுபோன்ற பெரிய கூட்டங்களின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பீட்டையும் ஈடுசெய்ய, இழப்பீடுகளை ஈடுசெய்ய ஒரு தொகையை வைப்புத்தொகையாக விதித்து கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது,” என்று நீதிபதி என். சதீஷ்குமார் கூறினார். இந்த வழக்கில், இதுவரை விஜய் பேரணிகளில் ஏற்பட்ட சேதங்களை அந்த கட்சியே நிவாரணம் வழங்கி சரி செய்ய வேண்டும் என்று தவெக தாக்கல் செய்த ரிட் மனு மீதான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது நீதிமன்றம் கருத்து தெரிவிக்கப்பட்டன.