சேலம் வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் சின்னம்புத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து ஆசைக்கு இணங்க வைத்து 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டியிருப்பதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி ஆசைக்கு இணங்க வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பெண்களின் ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் மணிகண்டன்.
காவல்துறையினரிடம் புகார் அளித்த பின், அவர்கள் மணிகண்டனை அழைத்து அவருடைய அலைபேசியில் இருந்த வீடியோக்களை அழித்தாக பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்பிரச்சனை பூதாகரமாகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஆணையிட்டுள்ளார். மண்கண்டன் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து புகார் மனு விசாரணைக்காக கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.