அரியலூர் நகராட்சியில் வார சந்தை ஏல குத்தகை, ஓட்டுநர் ஓய்வரை கட்டணம் வசூல் செய்யும் குத்தகை, ஏரிகளில் மீன் பிடிக்கும் குத்தகை உள்ளிட்ட 20 தீர்மானங்கள், உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டன.
அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில், நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம், நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஆ .முத்துசாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் நகராட்சி மேலாளர் சரஸ்வதி வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக செலவினங்கள், வார சந்தை ஏல குத்தகை உரிமம் ,ஓட்டுநர் ஓய்வரை கட்டணம் வசூல் செய்து கொள்ளும் குத்தகை உரிமம், நகராட்சிக்கு சொந்தமான செட்டி ஏரி, ஐயப்பன் ஏரி, பள்ளி ஏரி உள்ளிட்ட 3 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமத்திற்கான ஏல குத்தகைகளுக்கு மன்ற அங்கீகாரம் கோருதல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள், உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் திமுக நகராட்சி கவுன்சிலர்கள் ராணி, ரேவதி, ஜெயந்தி, சேசுமேரி, செல்வராணி, ஜி ஜெ.கண்ணன், மு.க புகழேந்தி, அன்பு ராஜேஸ், ப. சத்யன், அதிமுக கவுன்சிலர்கள் ஓ வெங்கடாஜலபதி, மகாலட்சுமி, இன்பவள்ளி, ஜீவா, இஸ்மாயில், மற்றும் சுயேச்சை உறுப்பினர் மலர்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.