சென்னையில் வீட்டு வேலைக்கு சேர்ந்த 10 நாளிலேயே 14 சவரன் தங்க நகை திருடியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முதலாளிகள் நமக்கு கொடுக்கும் கூலியை விட நான்கில் ஒரு பங்கு தான் கூலி கொடுத்து… “பார்த்தாயா நான் அவனை வெறும் 100 ரூபாய்க்கு வேலை வாங்கிட்டேன்” என்று கூறுவோர் அதிகம். அதே நேரத்தில் அவர்களை வேலைக்கு வைத்துவிட்டு நகைகளையும், பணத்தையும் நிம்மதியை தொலைத்த முதலாளிகளும் அதிகம். அதன்வரிசையில் சென்னையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை நொளம்பூர் அண்ணாமலை அவென்யூ பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். ரங்கராஜின் வீட்டில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதாகும் ரிங்கு முகர்ஜி என்ற இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ரங்கராஜ் கடந்த 23-ந் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது அதில் 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நொளம்பூர் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ரிங்கு முகர்ஜிதான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.