100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கவில்லை எங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தேவரப்பன் பட்டி ஊராட்சி ஊராட்சியில் சுமார் 9000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலை நம்பி இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் 10 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் மீதி நாட்கள் வேலை வழங்கவில்லை தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் கூறும் பொழுது எங்களது பகுதியில் உள்ள சின்ன கவுண்டன்பட்டி வினோ பாபாஜி நகர், மீனாட்சிபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 10 நாட்கள் மட்டுமே இந்த வருடத்தில் வேலை வழங்கியுள்ளனர் யாரிடம் கேட்டாலும் சரியான பதில் கூறுவதில்லை உங்களுக்கு வழங்க முடியாது என துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர் அதேபோல் எங்களது பகுதியில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எங்கள் ஊரில் உள்ள மேல்நிலைத் தொட்டி சிமெண்ட் பில்லர் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
அதேபோல் ஊராட்சி செயலாளர் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து நாங்கள் பல்வேறு போராட்டங்களும் செய்து விட்டோம். தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகம் மாநில அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலைமறியலில் ஈடுபடும் போவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.