தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் அரசு கால்நடைப் பண்ணை கீழத்திடலில், ரூபாய் 2 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் வற்றுப் பசுக்கள் கொட்டிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தவின்படி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை கிராமத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் அரசு கால்நடைப் பண்ணை கீழத்திடலில், ரூபாய் 2 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் வற்றுப் பசுக்கள் கொட்டில், ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கறவை பசுக்கள் மற்றும் கன்றுகள் கொட்டில், ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை கொட்டில், பண்ணை மேலாளர் அலுவலகம் ஆகிய கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.