தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 443-வது திருவிழாவை முன்னிட்டு 25 -ஆம் ஆண்டு பொருட்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 443-வது திருவிழாவை முன்னிட்டு 25 -ஆம் ஆண்டு பொருட்காட்சி விழாவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை அனைத்து மக்களாலும் சிறப்பாக ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் விழா என புகழாரம்
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 443-வது திருவிழா வருகிற 26 -ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதாவை வழிபட்டு வரும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 25 -வது பொருட்காட்சியை பொருட்காட்சி குழுவினர் நடத்துகின்றனர்
இதற்காக மாதா கோவில் அருகே உள்ள சவேரியேனா மைதானத்தில் காஷ்மீரை போன்ற பனிக்கட்டி உலகம், ராட்சத ராட்டினங்கள் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மாபெரும் பொருட்காட்சி இடம் பெற்றது. இந்த பொருட்காட்சியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது, ஜாதி மத வேறுபாடு இன்றி ஊர் மக்கள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த திருவிழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும். மாதாவின் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோ பிரகாஷ் தலைமை வகிக்க அருட்தந்தை சிங்கராயன் அவர்கள் சவேரியாணா இல்லம் முன்னிலை வகிக்க, மாதா கோவில் பங்கு தந்தை ஸ்டார்வின் கலந்துகொண்டு ஆசியுறை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் , பங்கு பேரவையைச் சேர்ந்த நிர்மலா, பங்கு பேரவை செயலாளர் எட்வின் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.