சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பாக சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி நடந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மு. மதிபறையர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், சைதை விமல், சைதை ஆனந்த், கரசை தமிழ், டோபி கானா கார்த்திக் மற்றும் யோகேஷ் கலந்து கொண்டனர்