தவெக மாநாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர், பிளக்ஸ், கட்அவுட்களை 1 மணி நேரத்தில் அகற்றி தகவல் அளிக்க வேண்டும்.” என்று, மதுரை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் விஜய் மக்களைச் சந்தித்துப் பேசும் வகையில் மிகப்பெரிய மேடை மற்றும் ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிவைதொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக 6 பார்க்கிங் வசதிகளுடன் மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகளுடன் மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது.
மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கவுள்ளது. அதேபோல் நாளை தவெக தலைவர் விஜய், மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக 100 அடியில் கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டையொட்டி, பேனர் வைக்கும் பணியில் தொண்டர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற இனாம்கரிசல் குளம் பகுதியில் பேனர் வைப்பதற்காக 19 வயதான கல்லூரி மாணவர் காளீஸ்வரன் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம் மாநாட்டின் முன் பகுதியில் கிரேன் மூலமாகக் கொடிக் கம்பத்தை நடும் பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் திடீரென கிரேன் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றை இணைக்கும் பெல்ட் கழன்றது. இதனால் கொடிக்கம்பம் சரியத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த அனைவரும் பதறி ஓடினர். தொடர்ந்து 10 டன் எடை கொண்ட கொடிக்கம்பம் சாய்ந்து அங்கு நின்றிருந்த இன்னோவா கார் மீது விழுந்ததில், அதன் மேல் பாகம் மொத்தமாக நொறுங்கியது. விஜய் கொடியேற்றவிருந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது அக்கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருளரசு என்பவர், “மக்கள் பயன்படுத்தும் நடைபாதை மற்றும் பொதுப்பாதைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன. இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே அவற்றை அகற்றி, பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என்று கூறினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரை சென்று தற்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஆய்வு செய்ய சொன்னார்கள்.மேலும் “அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர், பிளக்ஸ், கட்அவுட்களை 1 மணி நேரத்தில் அகற்றி தகவல் அளிக்க வேண்டும்.” என்று, மதுரை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சட்ட விரோத பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.