சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனத்தில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து தவெக ஜோசப் விஜய் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்களைக் குறித்து புகார் அளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
அந்த புகார் மனுவில், கடந்த ஜூன் 21-ந் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களிடம் மனு வழங்கினோம்.

மேலும், கடந்த ஜூன் 5-ந் தேதி நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி அவர்கள் பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதனைக் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி தனி மனுவொன்றையும் ஆளுநர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது.
மாநில நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை நிலைநிறுத்தும் வகையில், இந்த இரண்டு மனுக்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது நியாயமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என கேட்டுள்ளது.
இச்சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான மேனன் அரவிந்த் அவர்களும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்களும் உடனிருந்தனர்.