மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சரிடம் கூறுவேன். ஆளுநரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சனை என் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மக்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். வாக்களித்த மக்களால் பிரச்சனைகளை உணரவும் முடியும்; தீர்வுகளை சொல்லவும் முடியும். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன்.
அவசியம் எனில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன். அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள்.. நாம் இணைந்து செயல்படுவோம். நமது சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் போதுதான் பெரிய பிரச்சனை” என ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.