சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனத்தில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து திமுக நிர்வாகிகள், தவெக ஜோசப் விஜய் ஆட்சியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் தவெக செய்யும் குதிரைபேரம் குறித்து புகார் அளித்த திமுக நிர்வாகிகள்.
அந்த புகார் மனுவில், வெளிப்படையாக தவெக செய்யும் குதிரைபேரம், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை மூலம் மிரட்டியது உள்ளிட்ட புகார்களை முழுமையாக விசாரிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக ஆட்சியில் பெருகிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொலைகள் மற்றும் பாலியல் சம்பவங்கள், எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள் காபினேட் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் கலந்து கொள்வது, கரூர் துயர சம்பவத்தில் காவல்துறையே கொலை செய்தது என்றெல்லாம் வரம்பு மீறி பேசும் அமைச்சர்கள், எதேச்சதிகாரத்துடன் தொடரும் கைது நடவடிக்கைகள்.
தவெக அமைச்சரவை கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றது தொடர்பாக, அரசு வழக்கறிஞர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் எழும் லஞ்சப் புகார்கள், தமிழ்நாடு முழுக்கவும் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் மேற்கொள்ளும் அடாவடிகள் அதன் மூலம் அரசு ஊழியர்கள் சந்திக்கும் கடும் மன அழுத்தம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.