திருப்பரங்குன்றம் கோயிலில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்தபோது, மரபை மீறி கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கில், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெறிவித்துள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடந்த மே 15-ந் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்தின்போது பக்கதர்களின் வழிபாட்டை தொந்தரவு செய்யும் விதமாகவும், அமைச்சரின் தரிசனத்திற்காக வேண்டும் என்றே மரபை மீறி, கூடுதல் நேரம் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதேபோல, கருவறையில் அமைச்சர் சாமி தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அதேபோல, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகியிருந்தார்.
கோயில் நடை அடைப்பதற்கு முன்னரே அமைச்சர் கோயிலுக்கு சென்றுவிட்டதாகவும், இதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக தங்களிடம் இருப்பதாகவும் பாலசுப்பிரமணியன் கூறியிருந்தார். நண்பகல் 1 மணிக்குதான் கோயில் நடை அடைக்கப்படும் என்றும், ஆனால் 12.50 மணிக்கே அமைச்சர் உள்ளே நுழைந்துவிட்டதாகவும், இதனால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பாலசுப்பிரமணியன் விளக்கமளித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழத்த விரும்பவில்லை என்றும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.