தவெகவின் சாத்தூர் வடமேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகுருவை செல்போனில் தொடர்பு கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில், “சாத்தூர்காரர் எப்படி ராஜபாளையத்தில் வந்து பேசுவது, லட்சுமணனிடம் போன் பண்ணி சொல்லி விடுங்கள், நான் அவர் மீது சட்டப்படி புகார் அளித்து உள்ள தூக்கி வைத்துவிடுவேன், என்னை ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப சீண்டிக் கொண்டே இருக்கிறார்.
ஏற்கனவே பொதுச் செயலாளர் 6 மாதங்களுக்கு முன்னர் திட்டினார், என்னைப்பார்த்தால் எப்படி தெரிகிறது, என் தொகுதிக்குள் அந்த பையன் வருவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?. என் தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரர்களை காலைக்கூட வைக்க விட மாட்டேன், காலை வைத்தால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்பேன்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.