அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக.. என டை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜு இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். மேலும், பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து ஜாய் கிரிசில்டா வருகிறார்.

இந்நிலையில், தனது கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுதாக்கல் செய்துள்ளார். ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டுக்கள் எந்த வித அடிப்படை ஆதராங்களும் இல்லாமல் முன்வைக்கப்பட்டவை எனவே அவர் மேற்கொண்டு அவதூறு பரப்பும் விதமாக பேசுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ஜாய் கிரிஸில்டா செப்டம்பர் 16 -ந் தேதிக்குள் விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை “அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக.” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். ஜாய் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.