சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் ரயில் நிலையம் முன்பு அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தம் இன்றி உடனடியாக வெளியிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.