அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் க. இராமநாதன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களிடம் புகார் அளித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை சீர்குலைத்து, கலவரம் மற்றும் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீர் உள்ளிட்டோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரிகை வைத்தனர்.

மேலும் அவர்கள் பேட்டி அளித்த யூடியூப் சேனல்களின் இணையதள கணக்குகளை முடக்கி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் க. இராமநாதன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா .சாஸ்திரியினை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இந்நிகழ்வின் போது ஒன்றிய மதிமுக செயலாளர்கள் அண்ணா துரை, இராமச்சந்திரன், கவிஞர் எழிலரசன்,பொதுக்குழு உறுப்பினர் வி எஸ் கொளஞ்சி (எ) சிவக்குமார், மாவட்ட மதிமுக தொண்டரணி அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதி அறவழி , அரியலூர் நகர மதிமுக செயலாளர் இராம மனோகரன்
மற்றும் R.சுந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.