ஒரு காலத்தில் காவல்துறையினரை காணும்போது மக்களுக்கு மதிப்பும் மரியாதை இருந்தது. இப்படி மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்த காவல்துறையினர் அவ்வப்போது தரம் தாழ்ந்த செயல்களை செய்து அவர்களின் தரத்தை அவர்களே கொடுத்துக்கொண்டு உள்ளனர். நெல்லில் புதர் போல குற்ற செயல்களை தடுக்கும் காவல்துறையினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது மக்களுக்கு காவல்துறையினர் மீது இருந்த நம்பிக்கையும் போய் கொண்டுள்ளது.
இப்படி ஒரு சம்பவம் தான் இன்று தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி காரைக்காலில் பணியாற்றிய காலத்தில், ஏற்கனவே திருமணமான பெண் காவலருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணி நிமித்தமாக ஆரம்பித்த இவர்களின் இந்த பழக்கம், நாளடைவில் எல்லை மீறி சென்று தகாத உறவிலும் முடிந்தது. அந்த உயர் அதிகாரி 2 மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்துவிட்டார். ஆனாலும் அவர்களுக்கிடையிலான கள்ளக்காதல் துண்டிக்கப்படவில்லை.
நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், அலைபேசி, வாட்ஸ்அப், வீடியோ கால் மூலம் அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது. கள்ளக்காதலன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதால், இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது போனும் கையுமாகவே பெண் காவலர் காணப்பட்டார். அலைபேசியை எப்போதும் கையில் வைத்திருப்பதும், அடிக்கடி பேசுவதும் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலரின் கணவரும் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால், சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியின் அலைபேசி கால் பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்ச்சியாக பேசப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் அவரது அலைபேசியை ஆய்வு செய்துள்ளார். அலைபேசியின் கண்ட காட்சிகள், அவரை நிறையவே நிலைகுலைய வைத்துவிட்டது..
உடனடியாக., காரைக்கால் சீனியர் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யாவை சந்தித்து, தன்னிடம் இருந்த ஆதாரங்களை காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். தன்னுடைய கணவர், தன்னுடைய அலைபேசியை ஆராய்ந்து, இப்படியொரு நடவடிக்கையை எடுப்பார் என்று மனைவி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
இந்த விவகாரம் வெளியே வந்ததையடுத்து, பெண் காவலர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானர். கணவருக்கு எல்லாம் தெரியவந்துவிட்டதே என்ற பயமும், அவமான உணர்வும் அவரை மனதளவில் நொறுக்கியது. இதன் விளைவாக, 2 நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அப்பெண் காவலரை உடனடியாக மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மற்றொரு பக்கம் கணவர் தந்த புகார் மீது, புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்த அந்த உயர் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை ஆரம்பமாகிவிட்டதால், அந்த அதிகாரி இப்போதும் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறாராம். இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இக்கிறாராம். இந்த சம்பவம்தான், புதுச்சேரி காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.