தென்காசி மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் அனைத்து கூட்டம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற தொகுதி MLA S. பழனி நாடார் அவர்கள் தலைமையில், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, முரளி, ராஜா, அமீர்கான், சண்முகம் சிலுவை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி MLA ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்க, மாநில பேச்சாளர் S .R பால்துரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் சங்கர், AKS செல்வன் காங்கிரஸ் நகர தலைவர் SKD ஜெயபால் சண்முகவேல் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் சகோதரி சண்முகசுந்தரம் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மூன்று வாகனங்களை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை சிறப்புரை யாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், நெல்லை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ், சுரண்டை நகராட்சி சேர்மன் எஸ் பி என் வள்ளி முருகன், சட்டநாதன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ராஜாராம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் முன்னதாக காமராஜர் சிலைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் செல்வப்பெருந்தகை பேசுகையில், பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜாதி மற்றும் மத கலவரங்களை தூண்டி மக்களை பிளவு படுத்தி ஆட்சியைப் பிடிக்க பகல் கனவு காண்கிறார்கள். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஜாதி மதங்களைக் கடந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி சுமார் 500 கோடி சொத்துக்களை காங்கிரஸ் கட்சி மீட்டு எடுத்தது என தெரிவித்தார்.