தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த்திற்கு பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ‘கவுண்டனுக்கு கவுண்டன் உட்கார்ந்து பேசி இருக்கலாம்’ என அந்த பெண் பேசி இருப்பதை அதிமுகவுடன் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 77 வயதான K A செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடைப்பதால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய நிலையில் கடந்த மாதம் VK சசிகலா, TTV தினகரன், O ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததன் காரணமாக செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவம்பர் 26-ந் தேதி அவர் ராஜினாமா செய்தும் நவம்பர் 27-ந் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் தலைவர் விஜய்யின் முன்னிலையில் K A செங்கோட்டையன் இணைந்து கொண்டார். இந்நிலையில், செங்கோட்டையன் குறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ‘கவுண்டனுக்கு கவுண்டன் உட்கார்ந்து பேசி இருக்கலாம்’ என அந்த பெண் பேசி இருப்பதை அதிமுகவுடன் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில்,” பாருங்க மக்களே.. இதில் ஏதாவது நியாயம் இருக்குதா.. முதன் முதலாக இப்போதுதான் என் செல்போன் முன்னாடி உட்கார்ந்து நான் வீடியோ போடுறேன். எங்களுக்கெல்லாம் அவ்வளவு கேவலமா தெரியுது. அவர் பண்ண விஷயம். சின்ன விஷயம் தான்.. ஆனால், பெருசா தெரியுது. மனசுக்கு பாதிப்பா கூட தெரியுது கோபிசெட்டிபாளையத்தில் வாழ்ந்தவங்களுக்கு 50 ஆண்டுகால அரசியல் சாதனையில் கடைசி காலத்துல உன் தலையில நீயே நெருப்பு அள்ளி கொட்டி இருக்க.. மண்ணை கூட அள்ளி கொட்டல.. இனத்துக்கு இனம்.. கவுண்டனுக்கு கவுண்டன் நீ உக்காந்து பேசி இருக்கலாம் இல்ல..
ஒக்காந்து பேசுனா.. குடும்ப பிரச்சனை.. நாட்டு பிரச்சனையே தீருது. இத்தனை வருஷமா பாடுபட்டு ஒண்ணுமே இல்ல நாசமா போச்சு. எல்லாத்துக்கும் பேர் கெட்டுப் போச்சு. இன்னைக்கு இருப்பதிலேயே திராவிட கட்சியிலேயே மூத்த அரசியல் தலைவர் நீதான். இன்னைக்கு பேர கெடுத்து வச்சிருக்க.. கூத்தாடி கூட போய் சேர்ந்திருக்கிறார். அதுக்கு நமக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா” என பெண் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.