திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ரகுமான் பேட்டை சேர்ந்த நவாஸ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கத்தாரில் நடந்த சாலை விபத்தில் நவாஸ் இறந்துவிட்டதாக குடுமபத்தினருக்கு தகவல் கிடைத்தது.
மேலும்,இந்த தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரங்கலை தெரிவித்து கொண்டு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், தமிழ்நாடு சட்டபேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோர் நவாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் நிவாரண நிதியை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் த.மனோகரன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.