மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப் பயணத்தில் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் “எடப்பாடி ஒழிக” என்று கோஷம் எழுப்பியவர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருநெல்வேலியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தபோது, ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி “எடப்பாடி ஒழிக” என்று கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், அவர்களுடன் வாக்குவாதம் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனா். இதில் பரப்புரைக்கு வந்த பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த காவல்துறை அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.