அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரம் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் அரியலூரில் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்களான தோழர்கள் த. கோமல்ராஜ், க.முருகேசன், த, ராஜராஜன், ரா. செல்வக்குமார், க. செந்தில்குமார், சு. பிச்சைப்பிள்ளை, ரா. கதிரேசன், ரா. காளிமுத்து, ப. பாண்டித்துரை, ர. மணிகண்டன், மா. சுரேஷ், ரெ. மணிகண்ணன் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் T. தண்டபாணி கலந்து கொண்டு, ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு உள்ள நெருக்கடிகள், காவல்துறையினரால் அடிக்கடி ஏற்படும் தொந்தரவும், இவைகளை சமாளிக்க ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது மிகவும் முக்கியமானதும்,அவசியமானதாகும் என பேசும்போது குறிப்பிட்டார்.

பின்னர் ஏற்கனவே செயல்பட்டு வரும் சங்க நிர்வாகிகளான தலைவராக த.கோமல்ராஜ், செயலாளராக கே. முருகேசன், துணைத் தலைவராக T. ராஜராஜன், துணைச் செயலாளராக R. செல்வக்குமார், பொருளாளராக k. செந்தில்குமார் ஆகியோர்களை தொடர்ந்து பொருப்பிலிருந்து செயல்படுவது என ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விரைவில் மாநில நிர்வாகிகளை அழைத்து மாவட்ட அளவில் விரிவடைந்த பேரவை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.