மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற TN 63 N 1875 பதிவு எண் கொண்ட அரசு பேருந்து ஒன்றை ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் ஆகியோர் நேற்று பணியாற்றினார்கள். அந்த பேருந்து இரவு 10.30 மணியளவில் பாம்பன் பாலத்தை அடுத்துள்ள அப்துல் கலாம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்திலிருந்து சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறங்க முயன்றார்.

ஆனால், உடனே பேருந்தின் நடத்துனர் மாணவியிடம் உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்கி விடுவோம் என்று பேருந்தின் நடத்துநரும், ஓட்டுநரும் கறாராக கூறியதுடன், அந்த மாணவியின் பெற்றோருக்கு அலைபேசி மூலமாக தகவலும் கொடுத்தார். அவர்கள் வரும் வரை அந்த மாணவியை பேருந்திலேயே அமர வைத்து, சுமார் 15 நிமிடங்களில் வந்த மாணவியின் சித்தப்பா உடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.

காலம் கெட்டு கிடக்கு பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின் மாணவியின் சித்தப்பா அவரை அழைத்து செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் ஆகியோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.