தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதல் கட்டமாக முதல்வர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்தனர். இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவிநாசி தொகுதி தவெக எம்.எல்.ஏ மற்றும் கால்நடை துறை அமைச்சரான கமலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவான அரசு நிகழ்ச்சியை தனது குடும்ப விழாவாக மாற்றியதாக வீடியோ சமூக வைரலாகி வருகின்றது.