கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகரை பிரதிஷ்டை செய்த பின் சிறப்பு பூஜைகள் செய்து மக்களுக்கு அன்னதானம் செய்தனர்.
குறிப்பாக கோயம்புத்தூர் வடக்கு புளியகுளம் பெரிய விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4-டன் மலர்களைக் கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.