முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தல்படி, போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் திமுக உறுப்பினர் வைஷ்ணவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
“போதையில்லா தமிழ்நாடு” என்ற உயர்ந்த இலட்சியத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போதை விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வழியில், நேற்றைய தினம், போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் எனது சகோதரர்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுவதோடு, விழிப்புணர்வையும் வைஷ்ணவி ஏற்படுத்தினார்.