சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கயிறு திரிக்கும் தொழிலாளி ஒருவர் அவரது கூடத்துக்கு மின் இணைப்பு கோரி அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, கே.ஆர். தோப்பூர் மின் பகிர்மான அலுவலக உதவி பொறியாளராகப் பணிபுரியும் கவிதாவை தொழிலாளி நேரில் சென்று சந்தித்து இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்த மின் இணைப்பு சம்மதமான பேப்பர்களை கொடுத்துள்ளார்
அப்போது கே.ஆர். தோப்பூர் மின் பகிர்மான அலுவலக உதவி பொறியாளர் கவிதா மின் இணைப்பு கோரும் மனுவை உடனே பரிசீலித்து மின் இணைப்பு வழங்க வேண்டுமானால், ரூ.7,000 லஞ்சமாக தர வேண்டும் என்று தொழிலாளியிடம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தொழிலாளி, கே.ஆர். தோப்பூர் மின் பகிர்மான அலுவலக உதவி பொறியாளர் கவிதாவிற்கு பாடம் புகட்ட நினைத்து சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை தொழிலாளி கே.ஆர். தோப்பூர் மின் பகிர்மான அலுவலக உதவி பொறியாளர் கவிதாவிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான அதிகாரிகள் உதவி பொறியாளர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம், தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.