சென்னை, அம்பத்தூர், திருவேங்கடம் நகரைச் சேர்ந்த ‘டைல்ஸ்’ விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் நடராஜன். இவர், தனது தொழில் தேவைக்காக, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த வந்த திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் சரவணா நகர் சரவணா நகர், 14-வது தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்துள்ளார். காளிமுத்து திருமுல்லைவாயல் ஜாக் நகரில் டைல்ஸ் கடை நடத்தி வருவது மட்டுமின்றி வட்டிக்கும் பணம் கொடுத்து வருகிறாராம்.
இந்நிலையில், நடராஜனின் தொழில் தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் கடந்த 2018-ஆம் ஆண்டு காளிமுத்துவிடம் ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் கடனாக கேட்டிருந்தாராம். இதற்காக நடராஜனிடம் இருந்து கையெழுத்திட்ட தேதி, பெயர், தொகை நிரப்பப்படாத புரோ நோட், 6 வங்கி காசோலைகள், 3 ஸ்டாம்ப் பேப்பர்களை காளிமுத்துவிடம் கடன் வாங்கியுள்ளார்.
பிறகு நடராஜன், தான் வாங்கிய கடனை முறையாக வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்த நிலையில், காளிமுத்து வட்டிக்கு மேல் வட்டி போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், காளிமுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடராஜனை மிரட்டியும், அடித்தும் பல தவணைகளாக ரூ. 1,15,02,800-ஐ பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.90 லட்சம் பணம் தர வேண்டும் என வட்டிக்கு மேல் வட்டி போட்டு கேட்டு மிரட்டினாராம். மேலும் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், ரூ.90 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி நடராஜனுக்கு தொடர்ந்து காளிமுத்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடராஜன், காளிமுத்து மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தருமாறு சமீபத்தில் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்படி, ஆய்வாளர் அசோக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காளிமுத்துவை கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.