சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் 228 முறை மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆணுறை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மருந்து மாத்திரைகள், ஆடைகள், காய்கறிகள், வீட்டு உபோயக பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வித நாம் பயன்படுத்து அனைத்து பொருட்களையும் ஜொமாட்டோ, பிக் பாஸ்கட், ஸ்விக்கி, டிமார்ட், ஜப்டோ, ரிலையன்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் புதிது புதிதாக பல ஆஃப்கள் உருவாக்கி நம்முடைய நேரம் மற்றும் பணத்தை அதிக மிச்சப்படுத்துகிறது.
அவர்கள் வாங்கும் பொருட்கள் விவரங்கள் எல்லாமே ஆன்லைனில் இருப்பதால் ரெக்கார்டுகள் அப்படியே இருக்கும். அந்த விவரங்களை வைத்து தான் ஆன்லைன் தளங்கள் கவர்ச்சி அறிவிப்பு வெளியிடுவது, விளம்பரம் வெளியிடுவது என வேலைகளை செய்கின்றன. இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பற்றி பார்ப்போம். சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும். மேலும் ஆணுறை விற்பனை ஆன்லைனில் விறுவிறுக்காக நடக்கிறது. ஒவ்வொரு 127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.