சமூக வலைத்தளங்களில் பணக்கார ஆண்களுடன் நெருங்கி பழகி, காதல் வலையில் விழவைத்து, திருமணம் செய்து தானாக பிரச்சனையை கிளம்பி, மிரட்டி 8 பேரை திருமணம் செய்து, 9-வது திருமணத்துக்கும் முயற்சி செய்த பெண் கைது செய்யப்பட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில வருடங்களாகவே ஆண், பெண் பாகுபாடுயின்றி புது புதுவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பள்ளி ஆசிரி சமீரா பாத்திமா. இவருக்கு சின்ன வயதிலிருந்தே தான் அழகாக இருக்கிறோம் என்ற கர்வம் அதிகமாக இருந்துள்ளது. இந்த கர்வத்தால் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்துயுள்ளார்.

அதன் பிறகு 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்த துவங்கினார்.. அதில் தன்னுடன் பழகும் பணக்கார ஆண்களிடம், வீட்டு விஷயங்களையும், கஷ்டங்களையும் சொல்லி ஆறுதல் தேடிக்கொள்வாராம். பிறகு அவர்களிடம் நெருங்கி பழகி, காதல் வலையில் விழவைத்து, திருமணம் செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவாராம்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, வேண்டுமென்றே பிரச்சனையை கிளம்பி, தன்னை கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக கூறி மிரட்டி பணத்தை பறிந்துவிடுவாராம். ரிசர்வ் வங்கி ஆபீசர் முதல் யாரையுமே இந்த பெண் விட்டுவைத்ததில்லை.. குறிப்பாக, முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பணக்காரர்களுக்கு குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளார்.


அந்தவகையில், இதுவரை 8 பேரை திருமணம் செய்து, 9-வது திருமணத்துக்கும் முயற்சி செய்து வந்துள்ளார். இதற்குள் மேற்கண்ட 8 நபர்களில், சமீரா ஃபாத்திமாவிடம் ரூ. 15 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் இழந்த 2 பேர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சமீரா ஃபாத்திமா திடீரென தலைமறைவாகி உள்ளார். அதன் பிறகு நீண்டநாள் மறைந்து வாழ்ந்த நிலையில்தான், 9-வது திருமணத்துக்கு முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறை சமீரா ஃபாத்திமாவை கைது செய்துள்ளனர். அதன்பின்னர் விசாரணை பல பகீர் தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.