அரியலூர் மாவட்டம் திருமானூர் மத்திய ஒன்றிய செயலாளர் இரா. கென்னடி தலைமையில் கீழ்ப்பழூரில் திமுக பாகமுகவர்கள்(BLA-2), BDA-வாக்குசாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக வாக்காளர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தி உள்ளது.
வீடு வீடாக சென்று திமுக வாக்காளர் சேர்க்கையை நடத்துவதற்காக, பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திமுக பாக முகவர்கள்(BLA-2), BDA-வாக்குசாவடி டிஜிட்டல் முகவர்கள், பாக இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் பாக பெண்கள் பிரதிநிதிகள் பயிற்சி கூட்டங்கள் திமுக தலைமையினால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் SS. சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதல்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் மத்திய ஒன்றிய செயலாளர் இரா. கென்னடி தலைமையில் கீழ்ப்பழூரில் திமுக பாகமுகவர்கள்(BLA-2), BDA-வாக்குசாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி R.G.மணிவேல், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் தமிழரசி சுந்தர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, இலக்கிய தான் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுபாஷிணி கமலக்கண்ணன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.