பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மற்றுமின்றி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மரம் நடுவது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் அகரம் தென் சத்யா நகர் பகுதியில் ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் பாஜக மாநில செயலாளர் பட்டியல் அணி R.K. சூர்யா அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி அவரது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.