மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியை தெருவில் விரட்டி விரட்டி ஒரு தரப்பினர் தாக்கியதோடு, அவர் மீது முட்டைகளை வீசியது வீடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமனற தேர்தலில் 15 வருடமாக முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி வீழ்த்தி அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பும் அங்கு மோதல், கலவரம் ஏற்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட மோதலில் சோனர்பூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
தமிழகத்தை போல் கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. முதல்வராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்த மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 207 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவின் முதலமைச்சரானார்.
இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலின்போது மேற்கு வங்க மாநிலத்தின் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக சோனர்பூரில் நடந்த வன்முறையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சென்றார். இந்த சமயத்தில் ஒரு தரப்பினர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ‘திருடன்.. திருடன்..’ என்று கோஷமிட்டதோடு அபிஷேக் பானர்ஜியை தாக்க முயன்றனர்.
இதையடுத்து பாதுகாவலர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு ஹெல்மெட் வழங்கினார். இதனால் கோபமடைந்தவர்கள் அவர் மீது முட்டைகளை வீசியதோடு, அவரை நெருங்கி வந்து தாக்கினார். இதில் அபிஷேக் பானர்ஜி காயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர வைத்துள்ளது.