தேனி மாவட்டம் கம்பம் நகரிலுள்ள கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த கம்பம் தெற்கு மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் பாபு. இவர் கம்பம் மசூதி தெருவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 43 வயது மதிக்கத்தக்க பெணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், ரெடிமேட் கம்பெனியில் பணிபுரிந்து பெண் குழந்தையை காப்பாற்றி வருகிறார்.
அப்பெண்ணின் வீட்டின் அருகேயுள்ள பாபு அப்பெண் பணிக்கு செல்லும்போது, ஆபாசமாக பேசுவது, ஆபாச சைகை செய்வது என தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, அப்பெண் காவல் நிலையத்தில் அளித்தார். இதன் காரணமாக தவெக நிர்வாகி பாபு என்பவர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம் 1998 பிரிவு 4-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த தேனி தெற்கு மாவட்ட கழக சொந்தங்களே.. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் கட்டுப்பாடு மற்றும் கட்சி தலைமையின் வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் கம்பம் பகுதியைச் சேர்ந்த கம்பம் பாபு இன்று முதல் 24.06.2026 தேதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்.
இதன்படி அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சி சார்ந்த எந்த தொடர்பும் கொள்ளவேண்டாம் என தெரியப்படுத்திகொள்கிறேன்” என லெஃப்ட் பாண்டி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.