திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் குணசேகரன். இவரது மனைவி தேவி. குணசேகரனுக்கும், கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் தனியாக சந்தித்து அடிக்கடி கள்ளக்காதலை வளர்ந்து வந்துள்ளார்களாம்.
குணசேகரனின் கள்ளக்காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் தேவிக்கு தெரியவந்துள்ளது. இந்த கள்ளக்காதலை தேவி கடுமையாக கண்டித்தாராம். ஆனால் கைவிட மறுத்த குணசேகரன், நாங்கள் அப்படித்தான் இருப்போம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் குணசேகரன் தனது கள்ளக்காதலியுடன் திருச்சூரிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். கணவர் தனது கள்ளக்காதலியுடன் வெளியே சுற்று சென்று இருப்பதை தேவிக்கு தெரிய வந்துள்ளது. கணவர் எங்கு இருக்கிறார் என செல்போன் லொகேஷன் மூலம், அவர்கள் தங்கி உள்ள இடத்தை தேவி அறிந்தார்
இதையடுத்து தேவி, 4 பேர் அடங்கிய கூலிப்படையை ஏவி விட்டு, தனது கணவரையும், அவரது கள்ளக்காதலியையும் கடத்தி வருமாறு கூறினார். அதன்படி, 4 பேருடன் தேவியும் திருச்சூருக்கு சென்றுள்ளார்கள். அந்த விடுதியில் தங்களை காவல்துறையினர் என்று கூறி, குணசேகரன் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அங்கு குணசேகரன் தனது கள்ளக்காதலியுடன் இருந்தார். உடனே 2 பேரையும் அவர்கள் தாக்கி, வலுக்கட்டாயமாக அறையில் இருந்து இழுத்து வந்து காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்கள்
அவ்வாறு செல்லும் போது தேவி ஏவியதன் பேரில், குணசேகரனை கூலிப்படையினர் கடுமையாக தாக்கினார்களாம். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து குணசேகரனின் கள்ளக்காதலியை கூலிப்படையினர் வேறொரு காரில் கடத்தி சென்றார்களாம். அப்போது அவரை 4 பேர் ஒருவர் பின் ஒருவராக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கூலிப்படையினரிடம் இருந்து தப்பிய அந்த பெண், திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருச்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது தான், தேவி, கூலிப்படையை ஏவியை கணவருக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் பாடம் புகட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக கூலிப்படை தலைவரான தாமஸ், ரகுபதி, பால்ராஜ், சங்கர் மற்றும் குணசேகரனின் மனைவி தேவி ஆகிய 5 பேரை கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.