இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. ஆண், பெண் இருவருமே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை பேசி தீர்க்காமல் குடி மற்றும் கள்ளக்காதல் தேர்வு செய்கிறார்கள். இதன் விளைவு குடிப்பழக்கம் எப்படி பலரது கல்லீரலை காலி செய்கிறதோ, அதுபோல் குடும்பம் என்ற கல்லீரலை கள்ளக்காதல் காலி செய்த வருகிறது.
மேலும் நம் நாட்டில் கணவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணையை விட்டு பிரிய சிவில் நீதிமன்றத்திற்கு வரலாம். ஆனால், ஒரு ஆண் திருமணமான பெண்ணுடனோ, ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னாரு திருமணம் ஆன ஆணுடன் ஒன்றாக உறவு வைத்துக் கொள்வது என்பது சட்ட ரீதியாக தவறு இல்லை என்பது தான் இந்தியாவில் சட்ட ரீதியான கசப்பான உண்மை.
இதனால் கள்ளக்காதல்கள் இப்போது சர்வ சாதாரணமாக அதிகரித்துவிட்டது. இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர்.
இந்த கள்ளக்காதல் பெற்ற பிள்ளைகளையே எமனாக பார்க்கும்.. உறவினர்களை, பெற்றவர்களை, எதிரியாக பார்க்க வைக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு மோசமான சம்பவம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை சூராங்காடு பகுதியில் 36 வயதான கூலி தொழிலாளி ஜான் குமார். இவரது மனைவி நிவேத்யா. இவர்களுக்கு 5 வயதில் ஜெனிபர் ஜூலியட் என்ற மகளும், 3 வயதில் ராபின் கிறிஸ்டோபர் என்ற மகனும் உள்ளனர். ஜெனிபர் ஜூலியட் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் கடந்த செப்டம்பர் 28-ந் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்துள்ளனர். இதையடுத்து தொட்டியில் குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக கூறி நிவேத்யா சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதல் கட்ட விசாரணையில், வீட்டில் விளையாடிய போது அக்காள், தம்பி தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.
இதுதொடர்பாக நிவேத்யாவிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தந்தால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், நிவேத்யாவுக்கு ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதற்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதாக கருதி உள்ளனர். இதனால் குழந்தைகளை தீர்த்துக்கட்ட நிவேத்யா முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நிவேத்யா கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்கவும், காவல்துறையினர் சிக்காமல் இருக்கவும் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.