மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது..!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே எக்ஸ் பக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.

ஜெயக்குமார் கண்டனம்: அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுகிறது..!

கோயம்புத்தூர் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காடி அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. பாஜக அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் வலுத்து வருகின்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில், அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய நிதியமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்னைகளை கோரிக்கையாக முன்வைத்தார்.அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!, ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜோதிமணி வலியுறுத்தல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். பாஜக,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.

அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

ஹெச்.ராஜா: மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி..! மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு இல்லை…!

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் வா. மைத்ரேயன் மீண்டும் தாய் கழகம் அதிமுகவில் இணைந்தார்..!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த வா. மைத்ரேயன், மீண்டும் தாய் கழகம் அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா: திராவிட கட்சிகளின் வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார்..!

விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

ஹரியானா சட்டப் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வரும் 16-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரியானாவில் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. மேலும் ஆம்ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. எனவே ஹரியானாவில் நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸ் அதிரடி: “மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான்”

மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக.

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என ராமதாஸ் தெரிவித்தார்.

Amit Malviya: காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது..!

பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கப் பயணத்தின்போது, ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ரேபர்ன் ஹவுஸ் அலுவலகத்தில் பிராட்லி ஜேம்ஸ் ஷெர்மன் தலைமையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அதில் ஒருவர் தான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் உமர். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகுபவர் தான் இந்த இல்ஹான் உமர்.

இது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் பக்கத்தில், “எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரானவருமான, தீவிர இஸ்லாமியவாதி, காஷ்மீர் ஆதரவாளருமான இல்ஹான் உமரை அமெரிக்காவில் சந்தித்தார். சொல்லப்போனால் பாகிஸ்தான் தலைவர்கள் கூட இப்படியான சந்திப்பில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது.” என அமித் மாளவியா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன்: புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படும்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் எல்.முருகன் தொடர்ந்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.