பிரியங்கா காந்தி: ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்..!

அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1924- ஆம் ஆண்டு டிசம்பர் 27 -ஆம் தேதி நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பெலகாவியில் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு, நேற்று பெலகாவியில் நடந்தது.

பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாம் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை விடவும் நாம் தயாராக இருக்கிறோம். தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். எங்களுடன் இணைந்து போராட மக்களாகிய நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தார். இப்படியொரு அரசையும், அமைச்சரையும் இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது..!

இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்: RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது..!

500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதம் ராகுல் காந்திக்கு வலிக்கிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதி: ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்..! 300 யூனிட் மின்சாரம் இலவசம்..!

டெல்​லி​யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்​கு காஸ் சிலிண்​டர், வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் என காங்​கிரஸ் கட்சி தேர்தல் வாக்​குறுதி அளித்​துள்ளது. டெல்லி சட்டப்​பேர​வை​ 70 இடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்​ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்​தலில் இண்டியா கூட்​ட​ணி​யில் அங்கமாக இருக்​கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்​துப் போட்​டி​யிடு​வதாக அறிவித்து​விட்​டது. அதனால் டெல்லி தேர்​தலில் ஆம் ஆத்மி – காங்​கிரஸ் – பாஜக ஆகிய 3 கட்சிகளின் மும்​முனை போட்டி ஏற்பட்​டுள்​ளது.

இந்நிலை​யில், தேர்தல் வாக்​குறு​தி​களாக இந்த கட்சிகள் இலவச திட்​டங்களை அறிவித்து வருகின்றன. டெல்​லி​யில் நடைபெற்ற பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் டெல்லி மாநில காங்​கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் மற்றும் தெலங்​கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உட்பட முக்கிய காங்​கிரஸ் பிரமுகர்கள் தேர்தல் வாக்​குறு​திகளை வெளி​யிட்​டனர். அதில், டெல்​லி​யில் காங்​கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்​கப்​படும். வீடு​களுக்கு 300 யூனிட் இலவச மின்​சாரம் வழங்​கப்​படும் ஆகிய 2 வாக்​குறு​திகளை வழங்​கியுள்ளது.

மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்: அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்..!

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம்.

சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு சொல்ல விரும்பினோம். இதற்குமுன் அதானி குழுமம் மீது, பங்குச் சந்தை முறைகேடு, நிதி மோசடி, ஷெல் நிறுவன மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது மிக நீண்ட பட்டியல். இந்த விஷயங்களை அபையில் கொண்டு வருவது முக்கியம். இதனால் நாடு இழப்புகளைச் சந்தித்துள்ளது. இதனால் உலகம் நம் மீது நம்பிக்கை இழக்கக்கூடும். நாட்டைக் காப்பாற்றவே இந்தப் பிரச்சினையை எழுப்பினோம். 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி வங்கதேசம் சென்றபோது, ​​அதானி குழுமத்துக்கு அங்கு மின் திட்டம் கிடைத்தது. மலேசியா, இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், தான்சானியா, வியட்நாம், கிரீஸ் என மோடி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அதானிக்கு திட்டங்கள் கிடைத்தன.

மோடியின் ஆசி இல்லாவிட்டால் அதானியை எந்த நாடு தேர்ந்தெடுக்கும்? அனைத்தும் மோடியின் ஆதரவுடன் நடப்பதால், நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையை எழுப்ப விரும்பினோம். இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே விதி 267 உருவாக்கப்பட்டது. உண்மை வெளிவர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறோம் என்று மோடி கூறுகிறார். ஆனால், இதுபோன்ற ஊழல் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் நற்பெயருக்கு அவர்கள்தான் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மல்லிகார்ஜுன் கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர்.

இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதே அரசாங்கம் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை.

கோடிக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த முதலீடுகள் ஆபத்தில் உள்ளன. எனவே, இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையே இண்டியா கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன. இந்த நாட்டை ஏகபோகமாக நடத்த அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தொழில்முனைவோர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். சம வாய்ப்புகள், செல்வத்தின் சமமான பகிர்வு ஆகியவை கொண்டதாக தனியார் துறை விளங்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சந்தை உந்துதல் போட்டியே நாட்டுக்குத் தேவை” என மல்லிகார்ஜுன் கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு வழக்குப் பதிவு..!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான கே.சி. வேணுகோபால் கடந்த 17 -ஆம் தேதி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்திருந்தார். கே.சி. வேணுகோபால் அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக கோயம்புத்தூர் காங்கிரஸ் கமிட்டியினர் இரண்டு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றிருந்தனர்.

தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐஎன்டியூசி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் சென்றிருந்தார்கள். கோயம்புத்தூர் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில கலங்களாகவே உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வேணுகோபாலை வரவேற்க சென்ற இடத்திலும் மோதல் வெடித்துள்ளது. இரண்டு தரப்பினரும் வேணுகோபாலிடம் மாறி மாறி புகார் தெரிவித்து இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வேணுகோபால் இருவருக்கும் அறிவுரை சொல்லி கிளம்பிவிட்டார். அப்போது மயூரா ஜெயக்குமார் மற்றும் கோவை செல்வம் இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கு முயற்சித்தனர்.

இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில், கோவை செல்வம் மயூரா ஜெயக்குமார் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மயூரா ஜெயக்குமார் மீது பீளமேடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசி தரூர் வேதனை: டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா..?

“டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் சுவாசப் பிரச்சினைகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் டெல்லியின் பல பகுதிகளிலும் இன்று காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எக்ஸ் பக்கத்தில், “உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரம் டெல்லி என்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. உலகின் இரண்டாவது மாசடைந்த தாக்கா நகரைவிட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. நமது அரசாங்கம் பல ஆண்டுகளாக இந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது. நானும் கடந்த 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்காக காற்றின் தர வட்ட அட்டவணையை நடத்தினேன்,

ஆனால் கடந்த ஆண்டு கைவிட்டேன், ஏனெனில் எதுவும் மாறவில்லை, யாரும் கவலைப்படவில்லை. இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ பிழைக்கலாம் என்பதுபோல் உள்ளது. இத்தகையச் சூழலில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என சசி தரூர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராம்மோகன்: மறுசீரமைக்க காங்கிரஸில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நமது இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம். செல்வப்பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம அளவிலான காங்கிரஸை முழுமையாக கட்டமைக்கும் பணி சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அதேபோன்று அடுத்த 15 நாட்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு அசன் மவுலானா எம்எல்ஏ, திருவள்ளூர் வடக்கு, தெற்கு, ஆவடி மாநகரம் ஆகியவற்றுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி., கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கோபிநாத் எம்.பி., திண்டுக்கல் மேற்கு, கரூர், திருச்சி தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு ஜோதிமணி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்னர்.

காங்கிரஸில் இருந்து மனசோர்வாலும், கருத்து வேறுபாடுகளாலும் தற்காலிகமாக விலகி நிற்கும் காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டியது இக்குழுவின் கடமையாகும். புதிதாக உருவாகும் கிராம அளவிலான காங்கிரஸில் இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினரை இடம்பெற செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானா படோல்: ராகுல்காந்தியைக் கண்டால் பாஜகவுக்கு பயம்..!

ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.

அமித் ஷா பேச்சுக்கு நானா படோல் பதிலடி: இந்திரா இருந்திருந்தால் பாஜகான்னு ஒரு கட்சியே இருந்திருக்காது..!

இந்திரா இருந்திருந்தால் பாஜ இருந்திருக்காது என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.