மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு..!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார். அவருடன் துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

எல்.முருகன்: முதலமைச்சரின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு தகுதி இல்லை”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எல். முருகன், “குடும்ப அரசியல் நடத்தும் கட்சி திமுக என்பது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. திமுகவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அவருக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவார். அவருக்குப் பின் உதயநிதியின் மகன் முதலமைச்சராவார்.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர் அவர். திமுகவில் இருக்கும் பல்வேறு மூத்த தலைவர்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை கட்டமைக்க அரசியல் பின்னணி இல்லாத குடும்பங்ளைச் சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தொலைநோக்கு சிந்தனை உள்ள தலைவர் ஒருவரின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும், குடும்ப, வாரிசு அரசியல் செய்பவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.” என எல்.முருகன் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு!” இன்று பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்.. !

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் அன்பும், நன்றியும்! என எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்திரராஜன்: யார் ஏமாற போகிறார்கள் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

துணை முதலமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின்..! நிச்சயமாக மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது…!

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று..!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் 29-ஆம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2 -ஆம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார்.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவை, முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனரே?

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

புதிய கல்விக் கொள்கையை குறித்து கேள்விக்கு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அதே போல் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்கு நாங்கள் கடனுதவி பெற்றுத்தந்துள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த இரண்டு பெரும் நிதித்தேவையை பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடத்தில் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

அமெரிக்க பயணத்தின் போது, எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளதா? குறைந்த அளவு முதலீடுகள் தான் ஈர்க்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே?

இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம் குறித்து கேள்விக்கு கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் நிதி அமைச்சர் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.” என தெரிவித்தார்.

விசிக மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்விக்கு திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அரசியல் மாநாடு அல்ல.

மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில் நீங்கள் எதிர்பர்த்தது நடக்கும்.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் உறுதி: தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது..!

‘‘திமுக தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கூறியது, அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் தொழில் முதலீட்டைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்க வழிவகுக்கின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்தியஅளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியஇயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திமுக என்ற பேரியக்கம் தொடக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து,முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

திமுகவின் ரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி, தொடர்ந்து வழங்கினார். 40 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிறப்பான நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர திமுகவில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செப்டம்பர் 17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், அமெரிக்காவில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலியில் ஆலோசனை நடத்தியதுடன், மாவட்டச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்களில் பவளவிழாவுக்கான சுவர் விளம்பரங்கள் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்துகொண்டேன். கூட்டங்களில் தொண்டர்களின் ஆழ்மனக்கருத்துகள் குரலாக வெளிப்பட்டன. அவர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறுவதில்லை என உறுதியளிக்கிறேன்.

கடந்த 1949-ஆம் ஆண்டு வடசென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் பேரறிஞர் அண்ணா. 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டு காலத்தில், தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம், அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, நண்பனாக திகழும் இயக்கம்தான் திமுக. இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர, செப்டம்பர் 17-ஆம் தேதி திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பெருமிதம்: தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம்..!

‘‘ தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கூறியது, அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் தொழில் முதலீட்டைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்க வழிவகுக்கின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்தியஅளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியஇயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திமுக என்ற பேரியக்கம் தொடக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து,முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

திமுகவின் ரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி, தொடர்ந்து வழங்கினார். 40 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிறப்பான நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர திமுகவில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செப்டம்பர் 17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், அமெரிக்காவில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலியில் ஆலோசனை நடத்தியதுடன், மாவட்டச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்களில் பவளவிழாவுக்கான சுவர் விளம்பரங்கள் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்துகொண்டேன். கூட்டங்களில் தொண்டர்களின் ஆழ்மனக்கருத்துகள் குரலாக வெளிப்பட்டன. அவர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறுவதில்லை என உறுதியளிக்கிறேன்.

கடந்த 1949-ஆம் ஆண்டு வடசென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் பேரறிஞர் அண்ணா. 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டு காலத்தில், தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம், அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, நண்பனாக திகழும் இயக்கம்தான் திமுக. இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர, செப்டம்பர் 17-ஆம் தேதி திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ‘முதலமைச்சர் கோப்பை 2024’ கோலாகலமாக தொடங்கி வைப்பு..!

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் ‘முதலமைச்சர் கோப்பை’ என்ற விளையாட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி செப்டம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 11,56,566 நபர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.