இந்திய மகளிர் அணி கடைசி ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை மகளிர் அணி வீழ்த்தி T -20 போட்டியில் 3-2 என்ற கணக்கிலும் மற்றும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T -20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக T -20 தொடரை கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகின்றது இதில் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் களமிறங்கினர்.
ஆனால் இந்திய அணி 12.1 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்து இருக்கையில் 33 பந்துகளில் வெறும் 26 ரன்கள் எடுத்து பிரதிகா ராவல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்லீன் கவுர் தியோல் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைய 17.2 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்து நிலையில் ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஹர்லீன் கவுர் தியோலுடன் இணைய 32..6 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து நிலையில் ஹர்லீன் கவுர் தியோல் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைய இங்கிலாந்து பந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க மெல்ல மெல்ல இந்திய அணியின் ரன்ரேட் உயர்ந்தது.

சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 45..2 ஓவர்களில் அரைசதம் அடித்து ஒருநாள் போட்டியில் 7-வது அரைசத்தை பூர்த்தி செய்தார். ஆனால் 272 ரன்கள் எடுத்து நிலையில் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைய இங்கிலாந்து பந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க இந்திய அணியின் ரன்ரேட் உயர்ந்தது. மேலும் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 46..4 ஓவர்களில் சதம் அடித்து ஒருநாள் போட்டியில் 7-வது அரைசத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில் 304 ரன்கள் எடுத்து நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராதா யாதவ் மற்றும் ரிச்சா கோஷுடன் இணைய ராதா இறுதியில் 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பந்து வீசிய அனைத்து பந்து வீச்சாளர்களும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
319 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இங்கிலாந்து அணியின் எமி ஜோன்ஸ் மற்றும் டாம்சின் பியூமண்ட் களமிறங்கினர். ஆனால் இருவரும் 1 ரன் மற்றும் 2ர ன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் எம்மா லாம்ப் இருவரும் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் 170 ரன்கள் எடுத்து நிலையில் எம்மா லாம்ப் 81 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3.3 ஓவரில் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
சோபியா டங்க்லி மற்றும் நாட் ஸ்கைவர்-பிரண்டுடன் இணைய 195 ரன்கள் எடுத்து நிலையில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 105 பந்துகளில் 98 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து 7 விக்கெட்கள் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட் 6 விக்கெட்டுகளையும், நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா தல 1 விக்கெட்களையும் விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் 2-1 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. மேலும் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.