தமிழக கிராமப்புறங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து அவற்றைச் செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசால் “டிஎன் வெற்றி” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் நேரடி பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை தேர்வு செய்யும் ‘TN VETRI’ திட்டம் நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகளே திட்டமிடும் நடைமுறைக்கு மாற்றாக, கிராமப்புற பொதுமக்களின் நேரடி கருத்துக்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் முன்வைக்கும் முன்னுரிமைக் கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக, ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு சிற்றூரிலும் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதிக்கான ‘சமூக வரைபடத்தை’ வரைந்து, அதில் அத்தியாவசியத் தேவைகளைக் குறிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, செட்டிகாடு பகுதியில் மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளுடைய வழிகாட்டுதலின்படி கதிராநல்லூர் கிராம ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கிராமப்புற மக்களின் நேரடி பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்யும் ‘டிஎன் வெற்றி’ திட்டத்தின் மாதிரி முன்னெடுப்பு மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
கிராமப்புறங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து அவற்றைச் செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசால் ‘டிஎன் வெற்றி’ (TN VETRI – Tamil Nadu Village Empowerment Transformation and Rejuvenation Initiative) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகளே திட்டமிடும் நடைமுறைக்கு மாற்றாக, கிராமப்புற பொதுமக்களின் நேரடி கருத்துக்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் முன்வைக்கும் முன்னுரிமைக் கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் தின தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் இந்தியா பஸ்ட் செய்தி ஆசிரியர் டாக்டர் குமரவேல் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கம் பற்றி பொதுமக்களிடையே பேசினார் இதில் அப்பகுத்தினுடைய பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி ஆசிரியர்: டாக்டர். குமரவேல்