தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப் படையைவிட, தங்கள் கட்சியின் ஆபாசப் பொறுக்கிப் படையை அழித்தொழிப்பதே முக்கிய தேவை! அதனை முதலில் நிறைவேற்றுங்கள்! என என முதலமைச்சர் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ஆச்சரியக்குறிகளா இல்லை ஆபாசப் பொறுக்கிகளா முதல்வர் விஜய்? சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து, தங்களது கட்சிப் பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தியை அறிவீர்களா? ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் பல்லி, கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி என்னும் கதையாக, “தூய சக்தி, மாற்று சக்தி” என்று முழங்கிவிட்டு,
பெண்கள் விரோத திமுகவின் புது வெர்ஷனாகவே தங்களது தவெக முளைத்துள்ளதே, இதற்கு என்ன பதில்? கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆலந்தூர் வேம்புலி, சேலம் மணிகண்டன் எனத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை களவாடும் நபர்கள் அனைவரும் தவெகவைச் சார்ந்தவராக இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை எத்தனை கொடூரர்களை தவெக வளர்த்து வருகிறது? தவெகவில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த “மேலிடம்” யார்?
மொத்தத்தில், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப் படையைவிட, தங்கள் கட்சியின் ஆபாசப் பொறுக்கிப் படையை அழித்தொழிப்பதே முக்கிய தேவை! அதனை முதலில் நிறைவேற்றுங்கள்! என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.