தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்கலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெறவேண்டும். தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் விஜய் வென்ற ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் மேலும் சபாநாயகருக்கு ஒரு தொகுதி . இதையடுத்து 106 சீட்கள் தவெக கைவசம் இருக்கும். கூடுதலாக 12 எம்.எல்.ஏக்கள் தேவை. எனவே, வரும் நாட்களில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் 5 விசிக 2 சிபிஐஎம் 2 சிபிஐ 2 மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 கட்சிகள் ஆதரவளித்தால் floor test-ல் வெற்றி பெற முடியும். எனவே, வரும் நாட்களில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருமா? அமைச்சரவையில் இடம் கேட்பார்களா? என்பதெல்லாம் தமிழக அரசியல் களத்தை இன்னும் பரபரப்பாக்கும் என்றால் மிகையில்லை.