ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர், “கொரோனா 2வது அலை ஊரடங்கு காரணமாக 97 சதவீத இந்தியர்கள் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும் மே மாத நிலவரப்படி, வேலையிழப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு ஒரு மனிதரும் அவரது ஆணவமும் தான் காரணம் என்றும் அதோடு ஒரு வைரசும் அதன் உருமாற்றமும் இதற்கு காரணமாகும்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.