ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்”. சகோதரர் செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார் என ஜெயலலிதாவின் சகோதரி வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, 1972-ஆம் ஆண்டு MGR அதிமுகவை தொடங்கினார். அப்போது குள்ளம்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தேன். 1975 -ஆம் ஆண்டு கோவையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அரங்கநாயகம் தலைவராகவும், திருப்பூர் மணிமாறன் செயலாளராகவும் நான் பொருளாளராகவும் MGR-ல் நியமிக்கப்பட்டோம். வைத்தவரையே
திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவர், போட்டியிட்டு இந்தியாவிலேயே 2,37,000 ஓட்டுகளை கூடுதலாக பெற்றிருந்தார். 1977-ஆம் ஆண்டு நான் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட நினைத்தேன். ஆனால் MGR -ரோ, சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார். நானோ அவரிடம் போய் எனக்கு புதிய தொகுதி, எப்படி போட்டியிடுவது என்று! அதற்கு MGR, “என் பெயரை உச்சரி” என்றார். அதன் பிறகு நான் சத்தியமங்கலம் தொகுதியில் வென்றேன்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இயக்க்தை வழிநடத்த ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் இறந்த பிறகு சசிகலாவை தலைமையேற்க அழைத்தோம். அதன் பின்னர் நடந்தது எல்லாம் தெரியும். யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி வந்த போது சசிகலா, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை முன்மொழிந்தார். அப்போது பல்வேறு சோதனைகளை தாண்டி இந்த இயக்கம் நடந்தது.
எனக்கு இரு வாய்ப்புகள் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் கட்சி உடையக் கூடாது என்பதுதான். 2017-இல் அதிமுக ஆட்சிக்கு பிறகு 2019, 2021, உள்ளாட்சி தேர்தல், 2024 ஆகிய தேர்தல்களில் தோல்விதான் கிடைத்தது. 2024 -ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் 30 இடங்களில் அதிமுக வென்றிருக்கும். கழகம் ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளரை 6 முன்னாள் அமைச்சர்கள் போய் சந்தித்தோம். ஆனால் அவர் எதையும் ஏற்கவில்லை. மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் அரவணைத்தால் மட்டுமே வரும் 2026 -ஆம் ஆண்டு வெற்றி பெறலாம். என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் பேசுகையில், அவர்கள் எந்த நிபந்தனையுமின்றி கட்சி பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். MGR ஆட்சிக் காலத்தில் அவர் மீது எஸ்.டி. சோமசுந்தரம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அப்போது அவர்களை வீடு தேடி போய் சந்தித்த MGR, கட்சி பணியாற்றிட வாருங்கள் என அழைத்தார். அது போல் யாராவது இவர்கள் (எடப்பாடி) மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்களா? அது போல் காளிமுத்து, கண்ணதாசன் உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய போது கூட அவர்களில் சிலருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார்.
அதாவது MGR, ஜெயலலிதாவை பொருத்தமட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சி பணியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். அதைதான் நானும் வலியுறுத்துகிறேன். யார் யாரை சேர்க்கலாம் என்பதை பொதுச் செயலாளரே முடிவெடுக்கட்டும் என பழைய வரலாறுகளை செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், செய்தியாளர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என்ற கேள்விக்கு 2009 -ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாதா? என செங்கோட்டையன் சரமாரியாக பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்”.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்த விதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுக-வின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, தி.மு.க என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று படுவோம். வென்று காட்டுவோம். நாளை நமதே. வெற்றி நிச்சயம். பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க. புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க. நன்றி வணக்கம்.” என வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.